இராணுவத்தை கேலி செய்ததால் மியான்மர் நடிகருக்கு சிறை!
Saturday, August 27th, 2016
மியான்மர் படையை கேலியாக விமர்சித்து தன்னுடைய காரில் வண்ணம் தீட்டியிருந்த அந்நாட்டு நடிகர் ஒருவருக்கு சுமார் மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரமிக்க ராணுவம் நாய்களின் படை என்ற குற்றச்சாட்டு உள்பட பல அடைமொழிகளை நடிகர் துன் லின் தெயன் மார்ச் மாதம் தன்னுடைய காரில் எழுதியிருந்தார். உடனடியாக கைது செய்யப்பட்ட அவர், அவதூறு வழக்கில் குற்றம் காணப்பட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் அனைவரும் வாக்களித்த தேர்தலுக்கு பின்னர் அரசியல் சுதந்திரம் மியான்மரில் அதிகரித்து வருகிறது.ஆனால், ராணுவத்தை பொதுவாக விமர்சிப்பது குற்றமாகவே பார்க்கப்படுகிறது
Related posts:
மக்களிடம் உண்மை பேசுங்கள் : ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரித்தானிய தூதர் அறைக்கூவல்!
மெகுனு புயல் தாக்கம் : ஓமானில் 11 பேர் பலி!
பாபர் மசூதி விவகாரம் - லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
|
|
|


