நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் – இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு கோரிக்கை!
Sunday, September 18th, 2022நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறு போகத்தில் எதிர்பார்த்ததை விடவும் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக இந்த ஆண்டு 6 இலட்சம் மெற்றிக் டன் அரிசி மாத்திரமே இறக்குமதி செய்யப்பட வேண்டும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரூபாவின் வீழ்ச்சியால் கடன் சுமை அதிகரிப்பு
சீருடை வவுச்சர்களுக்கான கால எல்லை நீடிப்பு!
முன்னால் உள்ள தடைகளை விலக்கி கொரோனா ஒழிப்புக்காக சளைக்காது உறுதியுடன் உழைப்போம் - ஜனாதிபதி கோட்டாபய ...
|
|
|


