இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Saturday, July 30th, 2022
இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய முன்மொழிவின் கீழ், மின்சார சபை, உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் என தனிப் பிரிவுகளாக செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியுடன் உற்பத்தி செலவைக் குறைக்கும் திட்டமாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.
000
Related posts:
நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை!
பயிர் சேதங்களுக்கான காப்புறுதித் திட்டம் - நிதியமைச்சு!
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவோர் மீது கடும் நடவடிக்கை - வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு ...
|
|
|


