எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் திருத்தப்பட்ட பாதீட்டை சமர்ப்பிக்க நடவடிக்கை – அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Tuesday, July 26th, 2022
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் திருத்தப்பட்ட பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கமைய அனைத்து அமைச்சுக்களினதும் ஒதுக்கீடு தொடர்பான திருத்தங்கள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி அடுத்த சில மாதங்களுக்கான இந்த பாதீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன !
முன்பள்ளி ஆசிரியர்களது வாழ்வியல் மேம்படுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செ...
எதிர்வரும் 30 ஆம் திகதி வேலணைப் பிரதேசசபையில் தேசிய வாசிப்புவிழா!
|
|
|


