அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – யாழ்.மாவட்டச் செயலர் அறிவிப்பு!
Sunday, July 17th, 2022
எரிபொருளுக்கு தேசிய ரீதியிலான “பாஸ்” வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் யாழ்.மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார் .
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
எரிபொருள் விநியோக ஒழுங்கு முறை தொடர்பில் தேசிய ரீதியிலான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட முன்னரே எரிபொருள் அட்டை விநியோகத்தை நாம் ஆரம்பித்துவிட்டோம் .
இப்போது தேசிய ரீதியான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அதனை நாம் புறக்கணிக்க முடியாது. ஆனாலும், யாழ். மாவட்டத்தில் எரிபொருள் அட்டை தொடர்ந்தும் வழங்கப்பட்டு, அதன் ஊடாக விநியோக ஒழுங்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.000
Related posts:
கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்?
திருகோணமலையில் 24 மணி நேரத்தில் பதிவாகிய கொரோனா தொற்று எண்ணிக்கை!
போதைப்பொருளுக்கு அடிமையான மேலுமொரு இளைஞர் உயிரிழப்பு - பாடசாலை மாணவர்கள் சிலரும் போதைப்பொருளுடன் கைத...
|
|
|


