பெண் பொலிஸார் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை!
Friday, August 26th, 2016
நாட்டில் பொலிஸ் சேவையிலுள்ள பெண் பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் துன்புறுத்தல்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு 9 மாகாணங்களுக்கும் 9 பேரை நியமி்ப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
மகளிர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் இந்தப் பணிக்கு நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார். இதேவேளை தமது பிரச்சினைகளை இதன் பின்னர் ஆண் உத்தியோகஸ்த்தர்களிடம் அன்றி தமது மாகாணத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்படவுள்ள பெண் அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது
Related posts:
யாழின் பல பகுதிகளில் இன்று மின்தடை !
வெள்ளிக்கிழமைமுதல் நாளாந்தம் சில மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் - இலங்கை மின்சார சபையின் ஏற்பட்...
பெற்றோல் - டீசல் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறவிப்பு!
|
|
|


