எரிபொருள் இல்லையென்கிறார்கள் – ஆனால் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன – அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டு!
Tuesday, July 5th, 2022
கடந்த பத்து நாட்களாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு எரிபொருளை வழங்காவிட்டாலும், பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வாகனங்கள் பாதையில் பயணிப்பதன் மூலம் பெருமளவிலான மக்கள் எரிபொருளை சேமித்து வைத்திருப்பதை இது காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை பாதாள கோஷ்டியினரே கட்டுப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் எரிபொருளை எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கும் பொறுப்பு அந்தந்த எரிபொருள் நிலையங்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
25 அரச நிறுவனங்களிடமிருந்து கணக்காய்வாளர் அறிக்கை கிடைக்கவில்லை! - கணக்காய்வாளர் திணைக்களம்!
அனைத்து அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவ...
பதில் காவல்துறைமா அதிபரைச் சந்திகும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
|
|
|


