Friday, July 1st, 2022

சாதாரண துவிச்சக்கரவண்டியின் விலை 50,000 ரூபாவை கடந்தது – உதிரிப்பாக கொள்வனவும் அதிகரிப்பு என விற்பனையாளர்கள் தெரிவிப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளவில் நாடிச்செல்வதாகவும் கூறப்படுகின்றது.

மக்கள் சைக்கிள் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

தற்போதுவரை சாதாரண சைக்கிள் ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட சைக்கிள், ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது

இதேநேரம், துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குகுறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பாடசாலை நேர மாற்றத்தால் ஆசிரியர்களுக்கு பாதிப்பே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்...
அரியாலை பகுதி  மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம்...
ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி செலவிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ...