தொடரும் எரிபொருள் நெருக்கடி – ஜூலை 10 க்குப் பின்னரும் பாடசாலைகள் மூடப்படலாம் – கல்வி சாரா ஊழியர் சங்கம் எச்சரிக்கை!
Friday, July 1st, 2022
எரிபொருள் நெருக்கடி காரணமாக ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின்னரும் பாடசாலைகள் மூடப்படும் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களால் பாடசாலை மாணவர்களும் சிக்கியுள்ளதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை எனவும், எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை எரிபொருள் நாட்டுக்கு வராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதத்தில் பாடசாலைகள் மூடப்படலாம் என்றும், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளால் கல்வி அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பெப்ரவரி 20இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல்!
முதலீடுகள் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – ஜனாதிபதியிடம் இலங்கைக்கான புதய வியட்னாம் தூ...
மத சுதந்திரத்தை பேண வருகின்றது புதிய சட்டமூலம் - புத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அறிவிப்பு!
|
|
|
யாழ்.பேருந்து நிலைய காணி போதனா வைத்தியசாலைக்காக சுவீகரிக்கப்படப் போகிறது ஜனாதிபதியின் செயலாளர் யாழ்....
சீனா, இந்தியா, ஜப்பா நாடுகளின் நிதியுதவிக்கான உத்தரவாதத்திற்காக இலங்கை காத்திருக்கிறது - இலங்கையின் ...
தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக பேச்சாள...


