“எங்கள் மக்களுக்குத் தேவையான உணவை நாங்கள் வழங்க வேண்டும் – அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் அதிரடி பணிப்பு!
Friday, July 1st, 2022
இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘உழவாரப் போர்’ வேலைத்திட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியை இணைத்துக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் தலைமையில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு குழு மீதான விவாதத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் அதிகாரிகள் குழு கலந்துகொண்டது.
“எங்கள் மக்களுக்குத் தேவையான உணவை நாங்கள் வழங்க வேண்டும், அவர்களிடம் பணம் இல்லையென்றால், நாங்கள் அதை ஆதரிக்க வேண்டும், நாங்கள் திட்டத்தைத் தொடங்கி முழு நாட்டையும் ஒன்றிணைக்க வேண்டும்.
இதை நாங்கள் செய்ய முயற்சிக்க வேண்டும் என பிரதமர் ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெறுப்பு ஏற்படுவதற்காகவே சிகரட் மீது வரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது - ஜனாதிபதி!
வவுனியா வளாகத்தில் மாணவர்கள் முறுகல்!
மெக்சிக்கோவின் பசுபிக் கடற்கரையை நோக்கி நகரும் சூறாவளி வலுவிழந்துள்ளது - அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள்...
|
|
|


