காவல்துறை சட்டங்களை எவரும் மீற முடியாது!
Thursday, August 25th, 2016
பொலிஸ் சட்ட திட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்தவோ மீறவோ முடியாது என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாரிய வேலைத்திட்டங்கள் எமது நாட்டிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தொழிற்துறையை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில், அமைச்சின் செயலாளர் ஜகத். பீ.விஜேவீர, பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சிறி ஹெட்டிகே, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கலந்துக்கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
தனியார் காணிகளை சுவீகரிக்க மாதகலில் முயற்சி – பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பதற்றம்!
பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்...
250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் - தேர்தல்கள்...
|
|
|


