இது பொது முடக்கம் அல்ல – ஆனாலும் ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Tuesday, June 28th, 2022
ஜூலை 10 வரை முடிந்தளவு வீட்டிலிருந்து வேலை செய்வது அவசியம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
நேற்றுநள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஒரு பொது முடக்க சூழ்நிலையாகக் கருத வேண்டாம், எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு இது ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் செயல்முறையாகும், அதன் பிறகு நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
கடைகள், மருந்தகங்கள் பல்பொருள் அங்காடிகள் போன்றவை. சாதாரண நாட்கள் போல் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நல்லூர் ஆலய பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் மயக்கம்!
புலம்பெயர்தலுக்கான வாய்ப்பு அறவே இல்லை - அவுஸ்திரேலியா !
ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி - சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!
|
|
|


