ஆப்கானை புரட்டிப்போட்ட பூகம்பம்: நூற்றுக்கணக்கானோர் பலி – இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உடல்களை மீட்கும் பணி தீவிரம்!

Wednesday, June 22nd, 2022

ஆப்கானிஸ்தனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, இடிபாடுகளில் இருந்து தப்பியவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

இதேநேரம் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் கொல்லப்பட்டுள்ளனர் னர் மற்றும் 155 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாகாணத்தின் பர்மால், சிருக், நாகி மற்றும் கியான் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன , இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்களை வெளியே எடுப்பதற்கான முயற்சிகள் இப்போது நடந்து வருகின்றன என்று அதிகாரிகள் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான டோலோ நியூஸிடம் தெரிவித்துள்ளனர் .

இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நடுக்கம் 500 கி.மீற்றருக்கு பரவி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உளடளழமடம நாடுகளில் சுமார் 119 மில்லியன் மக்கள் உணர்ந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: