இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் – அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Thursday, June 16th, 2022
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என, அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் (Joe Biden) அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன் (Joe Biden) , மேற்கண்டவாறு கூறியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் ரணில் கூறினார்.
இதற்காக அமெரிக்கஅரச தலைவர் ஜோ பைடனுக்கு (Joe Biden) தனது நன்றியையும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரச உடமையாக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மானிய விலையில் மக்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இரவு நேர கடுகதி தொடருந்து சேவை!
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் - பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சந்திப்பு - சட்டவிரோத குடியேற்ற...
|
|
|


