ஜனாதிபதி அடுத்தமாதம் அமெரிக்கா விஜயம்!
Thursday, August 25th, 2016
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தேரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு எதிர்வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கைக் குழுவில், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முறையே இருவர் வீதம் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஆண்டைப் போலவும் இந்த முறையும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்!
மூளைக் காய்ச்சல் - யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் பலி!
பொய் கூறி பயணிகளை ஏமாற்றும் இலங்கை போக்குவரத்து சபை - பாதிக்கப்பட்டவர் ஆதங்கம்!
|
|
|


