யாழில் மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து விழிப்புணர்வு பேரணி!
Saturday, June 11th, 2022
மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் யாழ் நகரப் பகுதியை மையப்படுத்தி பேரணியாகச் சென்றனர்.
யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
000
Related posts:
நாடு தழுவிய ரீதியில் தீவிர டெங்கு ஒழிப்புத் திட்டம்!
யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்!
பல்கலைக்கழகங்கள் வெறுமனே பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக இருக்க முடியாது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
|
|
|


