யாழில் விடுதிகள் திடீர் சுற்றிவளைப்பு – சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் பலருக்கு எச்சரிக்கை செய்து விடுவிப்பு!
Saturday, June 4th, 2022
யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இயங்கிய விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் நடைபெறுகின்ற சமூக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக யாழ் மாநகர சபை அதிகாரிகளினால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சில விடுதிகளில் சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இதில் சில விடுதிகளில் நடைபெற்ற முறையற்ற விடயங்கள் கவனத்திற்கு எடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இவ்வருடத்தின் இதுவரையான நாட்களில் டெங்குநோயின் தாக்கத்திற்கு இலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளனர். 69 ...
வடக்கில் சோதனை நடவடிக்கை தொடரும் – இராணுவத்தளபதி!
மீண்டும் நடைமுறைக்கு வருகிறது முகக்கவசம் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!
|
|
|


