கப்பல் ஒன்றிலிருந்து மசகு எண்ணெய் இன்று தரையிறக்கம் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர!
Saturday, May 28th, 2022
கப்பல் ஒன்றிலிருந்து மசகு எண்ணெய் இன்று தரையிறக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளையதினம், டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை ட்விட்டர் பதிவொன்றில் அவர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, 17,077 மெற்றிக் டன் டீசல், 1,072 மெற்றிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.
37,391 மெற்றிக் டன் 92 ஒக்டேன் பெற்றோல், 6,142 மெற்றிக் டன் 95 ஒக்டேன் பெற்றோல், 2,437 மெற்றிக் டன் ஜெட் ஏ1 எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு!
துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரி...
ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுமாறு அரச மருத்துவ ...
|
|
|


