ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வலியுறுத்து!
Saturday, May 7th, 2022
பல மாதங்களாக நீடித்து வரும் ரஷ்ய – உக்ரைன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உக்ரைன், ரஷ்யா மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களின் நலனுக்காக போரை முடிவுக்குக் வர வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
000
Related posts:
வட கொரியாவின் சரக்கு கப்பலை தடுத்து நிறுத்தியது பிலிப்பைன்ஸ்
மக்களை வெளியேற்றும் பணி மீண்டும் ஆரம்பம்!
முகரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாள்களுக்கு சமூக வலைத்தளங்களை முடக்கும் பாகிஸ்தான்!
|
|
|


