கப் ரக வாகனமும் – மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து – கொடிகாத்தில் ஒருவர் பலி!

Tuesday, May 3rd, 2022

\யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த 31 வயதுடைய யோகேஸ்வரன் நிலாந்தன்   என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப் ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts:

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை - முன்னாள் ...
நாளைமுதல் அஸ்வசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - நலன்புரிப் பலன்கள் சபை அ...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு!