மிரிஹானை சம்பவம் – 15 பேருக்கு இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்நிலை!
Monday, May 2nd, 2022
அண்மையில் மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட 15 பேர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அவர்கள் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மையால் 26 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் 54 பேர் கைதாகினர்.
இதனையடுத்து நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 15 பேர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக இன்றையதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக அதிகபட்ச பாதுகாப்பு உத்தரவாதம் - இராணுவ தளபதி அறிவிப்பு!
கொரோனா பரவல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளில் தளர்வு - இன்றுமுதல் புதிய வழிகாட்டி...
ஜனாதிபதி ரணிலை சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளேன் - அமை...
|
|
|
தாமரை மொட்டின் மூலம் யானையொனறு வீழ்த்தப்பட்டுள்ளது – பெரமுனவின் வெற்றியை பாராட்டும் சர்வதேச ஊடகங்கள்...
நாடு பூராகவும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் கிடையாது - கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு - ஒத்துழைப்போருக்கு உதவிகளை ...


