எரிபொருளை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கு சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாம் – பொலிசார் வலியுறுத்து!
Wednesday, April 20th, 2022
எரிபொருளை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கு சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாமென பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் றம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது 30,000 லீட்டர் எரிபொருளைக் கொண்ட தாங்கி ஊர்தியொன்றுக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்க காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக பொதுமக்கள் எந்தவகையிலும் எரிபொருள் கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜப்பானின் அனர்த்த நிபுணர்கள் குழு இலங்கையில்!
இரண்டு மாதங்களில் ஊடக ஆணைக்குழு சட்டமூலம்!
இரு சிறுவரின் உதவியுடன் நயினாதீவு நாக பூசணி அம்மன் உண்டியல் உடைப்பு - மூவர் கைது !
|
|
|


