இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Monday, April 18th, 2022
நாட்டின் சில பகுதிகளில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இவ்வாறு இடியுடன் கூடிய மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் முற்பகல் வேளையில் மழைபெய்யும் சாத்தியம் நிலவுகின்றது.
இந்தநிலையில், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையில் கொரோனா மரணம் 107 ஆக உயர்வு!
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - நெடுந்தீவில் முதற்தடவையாக கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்...
பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோல்வி!
|
|
|


