இன்றும் மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
Friday, April 15th, 2022
நாட்டில் இன்றையதினமும் மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது
புத்தாண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம்முதல் இன்றையதினம்வரை மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
நாளைய தினம் மின்தடை அமுலாக்கப்படுவது குறித்து இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்க பெற்றமை மற்றும் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பதிவாகும் மழை வீழ்ச்சி என்பனவற்றை கருத்திற் கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
00
Related posts:
புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்!
ஆனையிறவில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் - டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு சாதகமான பதில்!
ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|
|


