மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் – மத்திய வங்கியின் புதிய ஆளுநர் வலியுறுத்து!
Monday, April 11th, 2022
நாடொன்றில் மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய வங்கியின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு காணப்பட்டால் அது முழு நாட்டுக்கும் எதிர்வினையை தோற்றுவிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, 2009 ஆம் ஆண்டு காலத்தில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதை தவிர்ப்பதற்கு மத்திய வங்கி சுயாதீனமாக செயற்பட்டது. தற்போதைய நிலைமையில் பொருளாதார மீட்சிக்காக மத்திய வங்கியும், பொருளதார துறைசார் நிபுணர்களும் முன்வைக்கும் யோசனைகளை தாமதப்படுத்தாமல் செயற்படுத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரச தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.
குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைக்க 2 பில்லியன் நிதி ஒதுக்கீடு - நகர அபிவிருத்தி அதிகார சபை...
அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில்...
|
|
|


