வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை – யாழ்.சித்தங்கேணியில் சம்பவம்!
Monday, April 11th, 2022
யாழ்.வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 15 பவுண் நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டிற்குள் இரு கொள்ளையர்கள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை!
பரீட்சைகளுக்கான வளவாளர் குழுவில் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரல்!
சீரற்ற வானிலை - 3 மாவட்டங்களில் 1500 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை...
|
|
|


