13 – 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்படமாட்டாது! – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Friday, April 8th, 2022
சித்திரை புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீர் மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நேற்று ஓரளவு மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக இந்த வாரத்தை விட எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு காலம் மேலும் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்!
யாழ்ப்பாணத்தில் சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நோக்கில் கண்காட்சி !
நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் இராணுவத்தினருக்கு ஆயுதங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் - நாடாளுமன்ற உ...
|
|
|


