டீசல் வழங்கலில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை – தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!
Tuesday, April 5th, 2022
டீசல் விநியோகிக்கப்படும் போது தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பேருந்துகளை இயக்கவேண்டுமாயின் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தற்போது ஏராளமான பேருந்துகள் டீசல் பெறுவதற்காக வரிசையில் நிற்பதாக சங்கத்தின் பிரதம செயலாளரான அஞ்சனா பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். நேற்று 15 வீதமான பஸ்கள் மாத்திரமே இயக்கப்பட்டன. பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு உரிய அதிகாரிகளும் அரசாங்கமும் பொறுகூற வேண்டும் என தெரிவித்த அவர், தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கும் நடைமுறை இதுவரை வகுக்கப்படாமை குறித்து கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்கள் கைது!
நாட்டுக்கு எது உகந்தது என சிந்தித்து தலைவர்கள் செயற்பட வேண்டும் - நீதி அமைச்சர்அலி சப்றி சுட்டிக்காட...
அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுகின்றனர் - அஞ்சினால் அந்தநேரம்முதல் அரசாங்கமும் நாட...
|
|
|


