இன்றுமுதல் நான்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, April 4th, 2022

வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா நேற்று அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய மாகாணங்களின் பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே தற்போதைய அபாயகரமான நிலை குறைவடையும் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந...
போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றியமைக்கப்பட்ட கெப் ரக வாகனம் - ஒன்றரை கோடி ரூபாய் பணத்த...
சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே? -    வெளிப்படுத்த வேண்டும் எ...