கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கும் பணிகள் இன்றிரவுமுதல் ஆரம்பம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
Monday, March 28th, 2022
நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது.
இதன்படி, நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுவினை விரைவில் நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயுமாறு சில சிவில் அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
மாதாந்த கூட்டத்தில் உபதவிசாளர் மேற்கொண்ட தீர்மானத்தில் தவறு – வலி மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்டத...
வேட்பாளர் வைப்புத்தொகை 43 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை - ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் சாத்தியமில்ல...
மாணவி வித்தியா கொலையின் மற்றொரு குற்றவாளியும் தற்கொலை - யாழ் சிறைசாலையில் நடந்தது என்ன?
|
|
|


