உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் சபாநாயகர் வலியுறுத்து!
Friday, March 11th, 2022
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை தெரிவித்தல் மற்றும் நாட்டுக்கு எதிராக உண்மைக்கு எதிரான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்காமை தொடர்பில் ,எதிர்கட்சி பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல எழுப்பிய கேள்விக்கு சபை முதல்வர் பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார். நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரின் உடன்பாட்டுடன் இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார் என்றும் சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
அடுத்த மாதம் இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி முடக்கம்!
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடு...
|
|
|


