அநுராதபுரம் – வவுனியா தொடருந்து மார்க்கத்தை மூடும் காலப்பகுதியில் மாற்றம்!
Saturday, March 5th, 2022
அநுராதபுரத்திற்கும், வவுனியாவுக்கும் இடையிலான தொடருந்து மார்க்கத்தை மூடும் காலம் பிற்போடப்பட்டுள்ளது.
மஹவ – ஓமந்தை தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தினால் இன்றுமுதல் அநுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான பகுதி தற்காலிகமாக மூடுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த திட்டம் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால், அந்த தொடருந்து மார்க்கத்தை மூடும் காலம் பிற்போடப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியால் போக்குவரத்து அமைச்சருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின்படி இந்தத் திட்டம் அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எதிர்வரும் 9ஆம் திகதி வர்த்தமானியில் உள்ளுராட்சி மன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் ...
பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெ...
பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
|
|
|


