பரமேஸ்வராச் சந்தியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆபத்தான நிலையில் ஒருவர்!
Wednesday, March 2nd, 2022
திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மூவர் படுகாயமடைந்தனர்.
பலாலி வீதி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை 12 மணியளவில் மோட்டார் சைக்கிளை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த மகேந்திரா வாகனம் மோதித் தள்ளியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மேலும் ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மகேந்திராவில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிசார் விபத்துடன் தொடர்புபட்ட வாகனங்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்பள்ளிச் சிறார்களின் கல்வித் தரத்தை மீண்டும் உயர்வடையச் செய்வோம் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரக...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் :ஏப்ரல் 20வரை பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சர் !
20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்!
|
|
|
யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந...
டெல்டா காரணமாக சிறுவர் தொற்றாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜய...
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி - கிலோ ஒன்ற...


