புலமைப்பரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவன் மாயம்!
Monday, August 22nd, 2016
நேற்றைய தினம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவனைக் காணவில்லை என மாணவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நுவரெலியா – நோர்வூட் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சிறுவன் தன்னுடைய மூத்த சகோதரியுடன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புலமைப்பரிசில் பரீட்சை நிமித்தம் சென்றதாகவும், அதன் பின்னரே காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சாதாரண தர பரீட்சை அவசியமில்லை: அனைவரும் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்படுவர் : கல்வியமைச்சர்!
ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது - வெளிவிவ...
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி - பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவ...
|
|
|


