சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமானது – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!
Monday, February 7th, 2022
நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த காப்புறுதி 7 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் குறித்த காப்புறுதியானது 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
இதேவேளை நாட்டின் சுற்றுலா வலயத்திற்கு அருகில் பிரத்தியேகமானதொரு பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கல்கிசை மற்றும் உனவட்டுன பகுதியில் அதற்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த மாதத்தில் மாத்திரம் 82 ஆயிரத்து 327 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106