அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு புதிய சட்டம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
Saturday, January 29th, 2022
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானால், அதனை சுயமாக சரி செய்யக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில், அவர்கள் முதலில் செய்ய வேண்டியது, வாகனத்தை வீதியின் பாதுகாப்பு வலயத்துக்கு அகற்றி, உடனடியாக 1969 அதிவேக நெடுஞ்சாலை சேவை இலக்கத்துக்கு அழைத்து அவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.
மாறாக, விபத்துகளை தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்கும் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (29) காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ரின் மீன் இறக்குமதியை உடன் தடை செய்ய வேண்டும் - கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு!
டெங்கு தொற்று - அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் – அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் - முன்னாள் ஜனாதி...
|
|
|


