நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய திருத்த பணிகளுக்காக சீன நிபுணர்கள் வருகை!
Thursday, January 20th, 2022
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை திருத்துவதற்காக சீன நிபுணர்கள் இருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன் மின்பிறப்பாக்கியை திருத்துவதற்கான ஆலோசனைகளை அவர்கள் தற்போது வழங்குவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறித்த மின்பிறப்பாக்கி செயலிழந்தமையால் தேசிய கட்டமைப்பிற்கான 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை.
இதனால் மிக துரிதமாக மின்பிறப்பாக்கியை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எச்சரிக்கை: வன்னியில் மூவருக்கு பன்றிக் காய்ச்சல் !
ஒரே நாளில் புகையிரத விபத்தில் 12 பேர் பலி!
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்!
|
|
|


