தேவை ஏற்படின் 4 ஆவது தடுப்பூசியை வழங்க இலங்கை தயார் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தகவல்!
Tuesday, January 18th, 2022
தேவை ஏற்பட்டால் 4 ஆவது கொவிட் தடுப்பூசியை வழங்க இலங்கை தயாராக உள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஆகையால், கொவிட் தடுப்பூசியின் 4 ஆவது டோஸை வழங்க அரசாங்கம் மேலதிக கொள்வனவு செய்வதில்லை.
இருப்பினும், 4 ஆவது டோஸ் தேவைப்படும் போதும் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவுச் செய்வதற்கான அமைப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முச்சக்கர வண்டி இறக்குமதிக்கு கட்டப்பாடு?
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு - பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் நிலை கூட்டம் செப்டம்பரில்!
பேருந்தை தீவைத்து எரிக்க முயற்சி - அச்சுவேலியில் பதற்றம்!
|
|
|


