விசேட தடுப்பூசி செலுத்தும் வாரம் ஆரம்பம் – இரவு 8 மணி வரை தடுப்பூசி மையம் செயல்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!
Wednesday, January 12th, 2022
இன்றுமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விசேட தடுப்பூசி செலுத்தும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேலதிகமாக நான்கு தடுப்பூசி மையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு 8 மணி வரை தடுப்பூசி மையம் செயல்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சாதாரண மக்களின் நலன்களை முன்னிறுத்தி வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டம் - புதிய பிரதமர் ரணில்...
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சீனா கலந்துரையாடல்!
வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் வீழ்ச்சி - நிதி இராஜாங்...
|
|
|


