நல்லூர் ஆலயச் சூழலில் பிளாஸ்ரிக்,ரெஜிபோமில் சுண்டல் விற்கத் தடை !
Friday, August 19th, 2016
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலயச் சூழலில் சுண்டல் வியாபாரிகள் பிளாஸ்ரிக் மற்றும் ரெஜிபோம் பெட்டிகளில் சுண்டல்களைப் போட்டு விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வியாபாரிகள் சுண்டல்களை இலைகள் அல்லது பேப்பர் தட்டுக்களில் வைத்தே விற்பனை செய்ய வேண்டும். சுகாதார விதிமுறைக்கு மாறாகப் பிளாஸ்ரிக் தட்டு மற்றும் ரெஜிபோம் பெட்டிகளில் சுண்டல்களைப் போட்டு வழங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளை மீறும் சுண்டல் வியாபாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பகுதியினர் எச்சரித்துள்ளனர்.
Related posts:
இராணுவ தலைமையகதிற்கு சென்ற ஜனாதிபதி !
தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும...
எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் விசேட விடுமுறை!
|
|
|


