2017 இல் உள்ளூராட்சி தேர்தல்!
Friday, August 19th, 2016
எதிர்வரும் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப்பகுதியில் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தம்மை பொறுத்தவரை, இந்த வருடத்துக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று எண்ணியபோதும், ஜனாதிபதி, 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதனை நடத்துமாறு பணித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில் புதிய தேர்தல் முறையின்கீழ் நடத்தப்படவுள்ள இந்த தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மானிட பண்பியல்புகளை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை கொரேனா புகட்டியுள்ளது - ஜனாதிபதி கோட்டப...
கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி நிதி மோசடி - இரண்டு சந்தேகநபர்கள் கைது!
காதலர் தினத்தை முன்னிட்டு அதிகளவு ரோஜா பூக்கள் விற்பனை!
|
|
|


