சில நாட்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்க வாய்ப்பு – மத்திய வங்கி ஆளுநர் தகவல்!
Monday, December 20th, 2021
இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது, இந்த வார இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் எனவும், நிதி கிடைக்கப் பெறும் விதம் தொடர்பில் தற்போது கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிற்கு நிதி கிடைக்கப் பெற்றவுடன், நிதி கிடைத்த விதத்தை வெளிப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குனறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு அஜிட் நிவாட் கப்ர...
செங்கடலை இரத்தக் கடலாக மாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சி - துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் க...
இலங்கை கிரிகெட் அணியின் ஆரோக்கியத்தை மனதிற்கொண்டு பயிற்றுவிப்பாளரை தேடும் இலங்கை கிரிக்கெட் சபை !
|
|
|


