வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, December 19th, 2021

வவுனியா, பண்டாரிக்குளம் பிரதேசத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள அரச காணியில் முப்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, தமது வாழ்விடங்களில் தாம் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சமூக வளர்ச்சிக்கு அனைவரும் அக்கறையோடு உழைக்கவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
பருத்தித்துறை, குருநகர், பேசாலை பகுதிகளில் விரைவில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர்...
கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர் சங்கங்கள் கோரிக்...

வடக்கில் வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன்றில் ட...
விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ...
உணர்வுகளுடன் செயற்படுங்கள் - சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!