பிரதேச சபைகளிலுள்ள சுகாதாரப் பணியாளர் பிரச்சினைகளை தீர்வு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கரைச்சி பிதேச சபை தவிசாளர் கோரிக்கை!

Friday, December 17th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தின் பால் தேவையைக் கவனத்தில் கொண்டு மாடு வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்குமாறும் அதேபோன்று ஆடு வளர்ப்பிலும் தேவையான அக்கறை செலுத்துமாறும்  சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.

மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்

மேலும் பிரதேச சபைகளில் காணப்படுகின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரச்சினைகளை   தீர்க்கும் வகையில் விசேட தீர்மானத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ள கரைச்சி பிதேச சபை தவிசாளரான வேழமாலிகிதன், இராணுவப் பயன்பாட்டில் இருக்கின்ற கரைச்சி பிரதேச சபை நூலகத்திற்கான பகுதிக் கட்டிடத்தினையும் விடுவித்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Related posts:

போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசம...
வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வழிமுறைகளில் தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாது - டக்ளஸ் எம்...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...

பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருக்கின்றது
சாவகச்சேரி மகிழங்கேணி குடியேற்றக் கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில்...
இந்திய இழுவலைப் படகுகள் மூலமான பிரச்சினை விரைவில் தீரும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!