மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின் தடை ஏற்படக்கூடும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
Monday, December 6th, 2021
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அண்மையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம், ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட மின்வெட்டு வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றாக இருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சைகள் நடைபெறும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
அரசின் திட்டமற்ற வாகன இறக்குமதி - 3,000 குறும் தூர பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் என எச...
|
|
|
கண்டி நில அதிர்வு விவகாரம் - சுண்ணாம்பு கற்பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பினால் அதிர்வு ஏற்பட்டதாக கூற முட...
சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு - அதனை கொள்வனவு செய்யும் அளவுக்கு தம்மிடம் பணமில்லை ...
நிரந்தரமாக விடைகொடுக்கிறது பிரித்தானியா - 2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம் – இலங்கைய...


