கோப் குழுவினால் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு!

Thursday, December 2nd, 2021

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 6 ஆம் திகதி மீண்டும் முன்னிலையாகுமாறு அந்த ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், எதிர்வரும் இரண்டு வாரங்களில் பல நாடாளுமன்ற குழுக்கள் கூடவுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்கள் மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடாளுமன்ற குழுவும், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக்குழுவும் இன்று கூடவுள்ளன.

இதேநேரம் வலுசக்தி மற்றும் போக்குவரத்து அமைச்சின் விசேட ஆலோசனை குழுக்கள் நாளையதினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


பாடசாலைகள் திறப்பது குறித்து அர சாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நாங்கள் எதிர்ப்பு - இலங்கை ஆசிரியர் ...
அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு – தானம் வழங்க முன்வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இர...
நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சி...