தோழர் ஜெகனின் தந்தையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை!
Sunday, November 28th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஜெகனின் தந்தையார் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களின் பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்பதாக வயது மூப்பின் காரணமாக சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் கடந்த 25.11.2021 அன்று காலமானார்.
இந்நிலையில் இன்றையதினம் (28) வட்டுக்கோட்டையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
Related posts:
சாரதி பயிற்சிகளின்போது சாரதிகளின் அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் தொடர்பிலும் அவதானங்கள் எடு...
காப்புறுதி நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
சுண்ணக்கல் விவகாரம் - கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு...
|
|
|
மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந...
தங்குதடையின்றி மீன்பிடித் தொழில் தொடர்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்ப...
யாழ். போதனா வைத்தியசாலையை செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்தாய்வ...


