சமையல் எரிவாயு விபத்துகளைத் தவிர்க்க மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல்!

Friday, November 26th, 2021

வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களைத் தவிர்க்க வீட்டிலுள்ள மின் கட்டமைப்பைப் பரிசோதிக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எரிவாயு விபத்துகள் இடம்பெற்ற எந்தவோர் இடத்திலும் சிலிண்டர்கள் வெடித்திருக்கவில்லை என்றும் மின்சாரக் கட்டமைப்புகளை பரிசோதனையிட்டு பாதுகாப்பாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளுமாறு அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த இடங்களில் உள்ள திரவ பெற்ரோலிய வாயு வெளியேறி காற்றில் கலந்துள்ளமையால், மின்சார சுவிட்ச் மூலம் ஏற்படும் தீப்பொறி பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டில் சமையல் எரிவாயுவின் மணம் வீசினால் மின்சார விளக்குகளை ஒளிரச் செய்யாமல், கதவு, ஜன்னல்களைத் திறந்து, மணம் குறையும் வரை சமையல் எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டாம் என அவர் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்தியவங்...
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி - சம்பளமில்லா விடுமுறையில் வெளிநாடு செல்லலாம் – அமைச...
சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழப்பு - உரிய முறையில் ச...