கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்!
Monday, November 22nd, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று கடற்றொழில் அமைச்சில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர், ஆழ்கடல் மீன்பிடிப் படகு தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் மற்றும் படகுகளை பதிவு செய்வதில் காணப்படும் அசௌகரியங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோருடன் தொடர்பு கொண்டு, நாடடிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய மீன்பிடிப் படகுகளை தயாரிப்பதில் காணப்படும் அசௌகரியங்களை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.
Related posts:
வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அதிகாரம் - அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு பலன்!
நல்லவரா வல்லவரா தேவை என்ற நிலையில், ஜனாதிபதி மீது நாம் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. - அமைச்சர் டக...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - மடு அன்னையின் சொரூப வீதியுலாவின் போது வீதிகளில் ட்ரோன் வானூர்தி மூலம் ம...
|
|
|


