இன்றும் மழையுடனான வானிலை காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
Sunday, November 21st, 2021
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்தியா - இலங்கை கூட்டு பயிற்சி!
One-text initiative பிரதிநிதிகள் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதனுடன் கலந்துரையாடல...
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார மரணம்!
|
|
|
யாழ்ப்பாணத்தின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு – ஆபத்தான நிலைமை இல்லை என்கிறார் மருத்துவ...
இலங்கையின் உறுதியான நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் – நிதி அமைச்சர் பசிலுடனான காணொளி...
மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - முக்கிய சந்தேகநபர்கள் தொடர்பில் அவசர உதவி கோரியுள்ள பொலிஸார்!


